ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - தாவரங்களின் உலகம்
பு%2Bக்களும் - வாசனைப் பொருள்களும் :
🌾 குளியல் சோப்பு, முகத்துக்குப் பு%2Bசும் பவுடர், வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு.
நறுமணப் பொருள்கள் :
🌾 தாவரங்களின் பலபகுதிகளிலிருந்து பெறப்படும் பொருள்கள் நறுமணப் பொருள்களாகப் பயன்படுகின்றன.
🌾 உணவுப் பொருள்களுடன் நறுமணப் பொருள்களைச் சேர்ப்பதால் உணவுக்கு நறுமணமும், வண்ணமும் கிடைக்கின்றன. நறுமணப் பொருள்கள் உட்கொள்ளும் அளவினையும், உணவு செரித்தல் வீதத்தையும் அதிகரிக்கின்றன.
🌾 தாவரங்களின் இலை, தண்டு, பு%2B முதலிய பல பகுதிகள் நறுமணப் பொருள்களாகப் பயன்படுகின்றன.
🌾 சில நறுமணப் பொருள்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. சுக்கு, புதினா, வெந்தயம் போன்றவை மருத்துவக் குணம் நிறைந்தவை. சாதாரண சளி, காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுகின்றன. மஞ்சள், கிராம்பு போன்றவை நுண்ணுயிரி எதிர்பொருளாகவும், கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றன.
🌾 இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது கேரளா.
தரைகீழ்த்தண்டு :
🌾 இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்களின் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளது. இது உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது.
நார்த்தாவரங்கள் :
🌾 ஆடை, சணல் கயிறு, சாக்குப்பை ஆகியவற்றையும் தாவரங்களே வழங்குகின்றன. நமது ஆடை பருத்திச் செடி தந்த பரிசு. கயிறு தேங்காய் நாரிலிருந்து பெறப்படுகிறது. சாக்குப்பை தயாரிக்கப் பயன்படும் நார் சணல் (Jute) என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
🌾 இதைத் தவிர, தலையணை, மெத்தை, பாய், விரிப்புகள் போன்றவற்றிலும் நார்த் தாவரங்கள் பயன்படுகின்றன.
🌾 மேலும் துணி நெய்ய, வலை பின்ன, கைவினைப் பொருள்கள் தயாரிக்க நார்கள் பயன்படுகின்றன. தாவரத்தின் எப்பகுதிலிருந்து நார்கள் கிடைக்கின்றன என்பதன் அடிப்படையில் நார்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
தண்டு நார்கள் :
🌾 வாழை நார், சணல் நார் போன்றவை தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெறப்படுகின்றன. நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்.
🌾 சணல் தாவரம் இன்றைய உலகில் நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றது. இத்தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இது உயிரி நெகிழி (Bio-plastic) தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. உயிரி நெகிழி மண்ணில் மக்கும் தன்மையுடையது.
இலை நார்கள் :
🌾 கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களின் இலைகளிலிருந்து நார்கள் எடுக்கப்படுகின்றன. இவை இலை நார்கள் எனப்படும்.
மேற்புற நார்கள் :
🌾 விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படும் நார்கள் மேற்புற நார்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக