வியாழன், 30 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013 தாள் - I


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I

1. ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை ------------ என அழைக்கிறோம். - இடிப்பஸ் மனப்பான்மை

2. நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர் - ஆல்பிரட் பினே

3. குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது - நகரும் பொருள்கள்

4. விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு

அ. உறுதிச் சிந்தனை

ஆ. புலனாகா சிந்தனை

இ. புதுமைச் சிந்தனை

ஈ. பிரதிபலிப்புச் சிந்தனை

விடை : இ. புதுமைச் சிந்தனை

5. மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்

அ. கல்விச் செயல்பாடு

ஆ. மதிப்பீட்டுச் செயல்பாடு

இ. வீட்டுச் செயல்பாடு

ஈ. பாட இணைச் செயல்பாடு

விடை : ஈ. பாட இணைச் செயல்பாடு

6. விடை ′8′ என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இது - அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும்

7. C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன? - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

8. ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று - மூளைதாக்கு

9. ′இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது′ என I.நா.சபை பிரகடனம் செய்த ஆண்டு - 1959, November 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக