தினந்தோறும் நீங்கள் செல்லும் சாலையில்... இதை கவனித்ததுண்டா?
சாலையில் உள்ள குறியீட்டு கோடுகள்!!
👉சாலை விதிகளை பற்றி நாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது, சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக? என்பதை பற்றித்தான்.
👉பொதுவாக நாம் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் கோடுகள் வரையப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஏன் இப்படி சாலையின் நடுவே கோடுகள் வரையப்பட்டுள்ளது என்பதை பற்றி யோசித்தது உண்டா?
👉சாலை விதிகளை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் இக்கோடுகள் வரையப்பட்டுள்ளது.
உடைந்த கோடுகள் :

👉சாலைக்கு நடுவே வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் வாகனங்கள் செல்லும் பாதையை பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
👉ஒரு திசையில் நாம் செல்லும்போது, நமக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கான பாதையை அறிந்து கொள்வதற்கும், சாலையில் எந்தப் புறம் நாம் செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தவும் மத்தியில் உள்ள உடைந்த கோடுகள் வரையப்படுகின்றன.
ஒன்று அல்லது இரண்டு வெள்ளைஃமஞ்சள் கோடுகள் :

👉இந்தச் சாலைகளில் இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அவசர கால வாகனங்களை தவிர பிற வண்டிகள், முந்திச் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கோடுகள் வரையப்படுகின்றன.
சாலையின் ஓரங்களில் உள்ள வெள்ளைக் கோடுகள் :

👉இது சாலையின் விளிம்பு மிக அருகில் இருக்கிறது. மேலும் கவனமாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சாலையை விட்டு வாகனங்கள் கீழே இறங்கி விபத்துக்குள்ளாமல் இருப்பதற்காக போடப்பட்டுள்ளது.
சாலையின் மத்தியில் உள்ள கோடும், உடைந்த கோடும் :

👉வாகனத்தை இயக்குபவர்கள், குறிப்பிட்ட பாதைக்குள் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான். மத்தியில் உள்ள கோட்டிற்கு இடதுபுறத்தில் டிரைவர்கள் வாகனங்களை இயக்க வேண்டும். உடைந்த கோட்டின் பகுதியில் இருந்தால், நீங்கள் கிராஸ் செய்து செல்லலாம். பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே இந்த சாலைகளில் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பது விதி.
ஜீப்ரா கிராஸிங் குறியீடு :

👉இது பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் ஜீப்ரா கிராஸிங் மேல் நடந்து செல்பவர்கள், பாதி வழியில் நிற்கக்கூடாது. தொடர்ந்து சென்று சாலையின் மறுமுனையில் தான் நிற்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக