TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. மூவிடப் பெயர்கள் யாவை? - தன்மை, முன்னிலை, படர்க்கை
2. ′யான்′ என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - ′என்′ என திரியும்
3. ′யாம்′ என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு திரியும்? - ′எம்′
4. ′நாம்′ என்னும் தன்மைப் பன்மைப் பெயர் எவ்வாறு குறுகும்? - ′நம்′
5. யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - எங்கள்
6. ′நீ′ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - நின் எனவும் உன் எனவும் மாறும்
7. ′நீர்′ என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு திரியும்? - நும், உம்
8. ′நீங்கள்′ என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - நுங்கள், உங்கள்
9. ′தான்′ என்றும் படர்க்கை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது எவ்வாறு மாறும்? - தன்
10. தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர்கள் எவ்வாறு மாறும்? - தம், தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக