ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. கண்ணதாசன் எழுதிய புதினங்களில் எது சிறந்த வரலாற்றுப் புதினமாகும்? - சேரமான் காதலி
2. கண்ணதாசனின் எந்நு}ல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றள்ளது? - சேரமான் காதலி
3. ஆகுபெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொருப் பொருளுக்குப் பெயராகி வருவதாகும்.
4. அளவை ஆகுபெயர்கள் எவை?
1. எண்ணல் அளவை ஆகுபெயர்
2. எடுத்தல் அளவை ஆகுபெயர்
3. முகத்தல் அளவை ஆகுபெயர்
4. நீட்டல் அளவை ஆகுபெயர்
5. 'நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி" எவ்வகை ஆகுபெயர்? - எண்ணலளவை ஆகுபெயர்
6. 'தயிரை இறக்கு" எவ்வகை ஆகுப்பெயர்? - தானியாகுப்பெயர்
7. தானம் தானிக்கு (பொருளுக்கு) ஆகி வருவது எவ்வகை ஆகுபெயர்? - இடவாகுபெயர்
8. 'மூன்று மீட்டர் தா" எவ்வகை ஆகுபெயர்? - நீட்டளலவை ஆகுபெயர்
9. 'கம்பரைப் படிக்கிறேன்" என்பது எவ்வகை ஆகுபெயர்? - கம்பர் இயற்றிய நு}லுக்கு ஆகி வருவதால் கருத்தாவாகு பெயராகும்.
10. 'வானொலி கேட்டு மகிழ்ந்தேன்" - இது எவ்வகை ஆகுபெயர்? - வானொலி என்னும் கருவி இசைக்கு ஆகி வந்தால் கருவியாகு பெயராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக