TET Exam 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. பெரியாரின் இயற்பெயர் என்ன? - இராமசாமி
2. பெரியார் பிறந்த ஊர் எது? - ஈரோடு
3. பெரியாரின் பெற்றோர்கள் யார்? - வெங்கட்டப்பர் - சின்னத்தாயம்மாள்
4. பெரியார் பிறந்த ஆண்டு - செப்டம்பர், 1879
5. சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்றுவதற்காக, அமைக்கப்பட்ட சங்கம் என்ன? - பகுத்தறிவாளர் சங்கம்
6. 'வைக்கம் வீரர்" என்று அழைக்கப்பட்டவர் யார்? - பெரியார்
7. சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை என்று கூறியவர் யார்? - பெரியார்
8. 'பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை", 'அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்" என்று கூறியவர் யார்? - பெரியார்
9. மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்று கூறியவர் - பெரியார்.
10. மதுவை ஒழிப்பதற்காக, தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தவர் யார்? - பெரியார்
11. பெரியார், தம் வாழ்நாளில், 10,700 கூட்டங்களில் ------------ மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார். - 21,400
12. 1970ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது" பெரியாருக்கு எதற்காக வழங்கப்பட்டது? - சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக
13. பகுத்தறிவு சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்? - பெரியார்
14. நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. - 1978
15. பெரியார் இறந்த ஆண்டு - டிசம்பர், 1973
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக