வியாழன், 16 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

1. செய்யுளிசை அளபெடை

2. சொல்லிசை அளபெடை

3. இன்னிசை அளபெடை

2. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் என்ன?

இசைநிறை அளபெடை

3. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன?

இசையை நிறைக்க வரும் அளபெடையைச் செய்யுளிசை அளபெடை என்பர்.

4. இன்னிசை அளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையா விட்டாலும் இனிய ஓசைக்காக அளபெடுத்தல்.

5. சொல்லிசை அளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை சொல்லிசை அளபெடையாகும்.

6. ஒற்றளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறைந்தால் மெய் எழுத்துகளும் அளபெடுக்கும்

7. ஒலிப்பு முனைகன் என்றால் என்ன?

ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகள்

8. சிறுபஞ்சமூலம் எதன் கீழ் ஒன்று?

பதினெண்கீழ்க்கணக்கு

9. சிறுபஞ்சமூலத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.

10. சிறுபஞ்சமூலம் என்று ஏன் பெயர் வந்தது?

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன. இப்பாடலில் உள்ள 5 கருத்துகள் மக்கள் மனநோயைத் தீர்ப்பன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக