ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் - இலக்கண வினா விடைகள் 0036
1. இலக்கண அமைப்புப்படி சொற்களை, எத்தனை வகையாக பிரிக்கலாம்? அவை யாவை? - நான்கு, 1. பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல்
2. ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது ............. - பெயர்ச்சொல்
3. மரம், கல், மண் ஆகியவை .............. - பெயர்ச்சொற்கள்
4. பெயர்ச் சொற்களுக்குரிய இரண்டு வகையாக இலக்கணம் என்ன? - 1. பெயர்ச்சொல் வேற்றுமையை ஏற்கும். 2. பெயர்ச்சொல் காலம் காட்டாது.
5. பெயர்ச் சொற்களுக்குப் பின் வருவது ............ - வேற்றுமை உருபுகள்

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. பெயர்ச் சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம். - ஆறு
7. மரம், மாடு என்பவை எவ்வகை பெயர்ச்சொல்? - பொருள் பெயர்
8. ஊர், சென்னை ஆகியவை எவ்வகை பெயர்ச்சொல் - இடப்பெயர்
9. ஆண்டு, காலை ஆகியவை எவ்வகைப் பெயர்ச்சொல் - காலப்பெயர்
10. மூக்கு, வேர் ஆகியவை எவ்வகைப் பெயர்ச்சொல் - சினைப்பெயர்
11. நன்மை, கருமை ஆகியவை எவ்வகைப் பெயர்ச்சொல் - குணப்பெயர்
12. செய்தல், கற்றல் ஆகியவை எவ்வகைப் பெயர்ச்சொல் - தொழிற் பெயர்
13. ஒரு செயலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்
14. வினைச் சொல் (எ.கா.) தருக. - கற்றான், நிற்கிறாள்.
15. வினைச் சொல்லின் இலக்கணம் - 1. வினைச்சொல் காலம் காட்டும். 2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.
16. காலம் எத்தனை வகைப்படும். - மூன்று
17. சென்றான், உண்டான் என்பவை ........... - இறந்தகாலம்
18. உண்கிறான், வருகின்றாள் என்பவை ........... - நிகழ்காலம்
19. செல்வான், படிப்பார் என்பவை ........... - எதிர்காலம்
20. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை ........... எனப்படும். - எச்ச வினை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக