புதன், 1 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2) பொதுத்தமிழ் வினா விடைகள் 034



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் வினா விடைகள் 034

1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நு}லை எழுதியவர்? - கால்டுவெல்

2. தமிழ்மொழியிலுள்ள மிகப் பழமையான நு}ல்? - தொல்காப்பியம்

3. மொழி என்றால் என்ன?

ஒருவர் தம் கருத்தை வெளியிடவும் அதனைக் கேட்போர் புரிந்து கொள்ளவும் கருவியாக அமைவது மொழி

4. இலக்கணம் என்றால் என்ன?

மொழியைப் பிழையின்றிப் பேசவும், கேட்கவும், கற்கவும், எழுதவும் துணை செய்வது இலக்கணம்.

5. எழுத்துகளின் வகைகள் எத்தனை?

1. முதல் எழுத்து 2. சார்பெழுத்து

6. முதல் எழுத்துக்கள் எவை?

'அ" முதல் 'ஒள" வரை உள்ள 12 எழுத்துக்கள், 'க்" முதல் 'ன்" வரை உள்ள 18 எழுத்துக்களும் ஆகிய 30 எழுத்துகள்

7. சார்பெழுத்து என்றால் என்ன? - முதல் எழுத்துகளை சார்ந்து இயக்கும் எழுத்துகள்

8. அளபெடை எத்தனை வகைப்படும்?

1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை

9. அளபெடை என்றால் என்ன?

தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும்

10. உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் ஏழும் அளபெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக