TET 2019,பொது அறிவு - தாவரவியல் வினா விடைகள் !!
1. செல்கள் சுவாசித்தலின் மூலம் ஆக்சிஜனைப் பெற்றுக் கரிமப் பொருள்களை எளிய மூலக்கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி ------------ ஆகும் - சுவாசம்.
2. சுவாசித்தல் நிகழ்ச்சியின்போது உணவு பொருள்களானது ------------ அடைகின்றன. - ஆக்சிகரணம்.
3. சுவாசித்தல் நிகழ்ச்சியின்போது உணவிலிருந்து ஆற்றல் விடுவிக்கப்பட்டு ------------ ல் சேமித்து வைக்கப்படுகிறது. - ATP (அடினோசின் டிரைபாஸ்பேட்).
4. ஈஸ்டானது ------------ தயாரிப்பில் பயன்படுகிறது. - மதுபானம்.
5. சுவாசத்திற்கு அடிப்டையாகப் பயன்படும் பொருள் ------------ எனப்படும். - சுவாசத் தளப்பொருள்.
6. C6H12O6 %2B 6O2 ➞ ------------ - 6CO2 %2B 6H2O %2B 2900 KJ ஆற்றல்.
7. சுவாசத் தளப்பொருள்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? - மூன்று, அவை கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள்.
8. சுவாசத்தின் இரு வகைகள் ------------ - 1. காற்றுள்ள சுவாசம், 2. காற்றில்லாச் சுவாசம்.
9. பாக்டீரியா மற்றும் பு%2Bஞ்சைகளில் நடைபெறும் சுவாசம் ------------ - காற்றில்லா சுவாசம்.
10. கிளைகாலிசிஸின் போது குளுக்கோஸ் ------------ ஆக பிளவுறுகின்றது. - இரண்டு பைருவிக் அமில மூலக்கூறுகள்.
11. ------------ ல் பைருவிக் அமில ஆக்சிஜனேற்றம் இரண்டு மற்றும் மூன்றாம் படிகளில் நடைபெறுகிறது. - மைட்டோகாண்ட்ரியா.
12. ஈஸ்ட் என்பது ------------ - ஒரு செல் பு%2Bஞ்சை.
13. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்சிஜனேற்றம் பெறும்போது ------------ ATP மூலக்கூறுகள் உண்டாகின்றன. - 38.
14. சில உயிரினங்களில் சுவாசித்தலின் போது ஆக்சிஜன் பயன்படுத்தப்படாதது ------------ சுவாசம் ஆகும். - காற்றில்லா.
15. காற்றில்லா சுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - நொதித்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக