TET 2019 சுழ்நிலையியல்
புனித ஜார்ஜ் கோட்டை:-
🌟 தமிழகத்தின் தலைநகரம் சென்னை. இங்குக் கி.பி 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
🌟 கூவம் ஆற்றுக்கும் வங்காள விரிகுடாக் கடலுக்கும் இடையே உள்ள மணற்பாங்கான இடத்தில் கட்டப்பட்டது.
🌟 ஆங்கிலேயத் தளபதி சர் பிரான்சிஸ்டே தலைமையில் புனித ஜார்ஜ் பிறந்தநாளில் இக்கோட்டையின் ஒரு பகுதி கட்டிமுடிக்கப்பட்டது. இதனால் இந்தக் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயர் பெற்றது.
🌟 இக்கோட்டை வடக்குத்தெற்காக 300 அடியும் கிழக்கு மேற்காக 90 அடியும் உள்ளது. இது மண் சுவர்களால் கட்டப்பட்டக் கோட்டையாகும்.
🌟 இதன் நான்கு திசைகளிலும் பிறைவடிவம் போன்ற மதில், அரண்போல் சு%2Bழ்ந்து நிற்கின்றது. இக்கோட்டையயைச் சுற்றி சுமார் 20 அடி உயரம் உள்ள மதில் சுவர் உள்ளது.

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🌟 டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களுடன் இருந்த வாணிபப் போட்டியைச் சமாளிக்கவும், முகமதியர்கள் ஆட்சி பரவுவதைத் தடுக்கவும், ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கும் தனி இடம் தேவைப்பட்டதால் இக்கோட்டையைக் கட்டினர்.
🌟 இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டுவதற்கு இடமளித்தவர் சென்னியப்ப நாயக்கர் ஆவார்.
🌟 ஆங்கிலேயர்கள் இந்தக்கோட்டையைக் கட்டிப் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார்கள். மேலும் இக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சட்டமன்றம் 60 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது.
தெரிந்துகொள்வோம்:
🌟 கோட்டையில் உள்ள மாதா தேவாலயத்தில் ராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹீஹேல் என்பவர்களின் திருமணம் நடைப்பெற்றது.
🌟 கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் போர்க்கருவிகள், பழங்கால நாணயங்கள், சீருடைகள், பீரங்கிகள் உள்ளன.
🌟 ஒளரங்கசீப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இக்கோட்டை பயன்படுத்தப்பட்டது.
🌟 இது ராபர்ட் கிளைவ் மற்றும் வெல்லெஸ்லி வாழ்ந்த வீடு.
🌟 1693இல் கோட்டையிலிருந்த பழைய விடுதி இடிக்கப்பட்டு கோட்டையின் கிழக்குப் புறத்தில் புதிதாகக் கட்டப்பட்டது. இதுவே பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலகமாக மாறியது.
🌟 இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம் புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக