TET தேர்வு - Ratio and Proportions தொடர்பான முக்கிய வினாக்கள்...!
சுழ்நிலையியல்
விலங்குகளும் ஐம்புலன்களும்
கேட்கும் திறன்
🌟 நாயின் கேட்கும் திறன் நம்மைவிட 40 மடங்கு அதிகம். எலிக்கு 90 மடங்கு அதிகம்.
🌟 வெளவால் தன் காதின் மூலமாக சாதாரணமாக 18 அடி தொலைவில் உள்ள பொருள்களையும் எளிதாக அறிந்து கொள்ளும்.
🌟 யானை, தன் தும்பிக்கை மூலம் அதிர்வுகளை உணரும் ஆற்றல் வாய்ந்தது.
🌟 கேட்கும் ஆற்றல் அதிகமுள்ள விலங்குகள் யானை, மான், குரங்கு, முயல், நாய், வெளவால் முதலியன.
தெரிந்துகொள்வோம்
🌟 குரங்கு, எறும்பு, நாய் போன்ற விலங்குகள் நிலநடுக்கம் வருவதை முன் கூட்டியே அறியும் திறன் உடையவை.
🌟 வண்ணத்துப் பு%2Bச்சி, கொசு, எறும்பு, நாய் மற்றும் தேனீ முதலியன முகர்தல் திறன் மிக்க விலங்குகள் ஆகும்.

விலங்குகளின் முகர்தல் திறன்
🌟 நாயின் முகர்தல் திறன் மனிதனைவிட இலட்சம் மடங்கு அதிகம்.
🌟 நாய், முகர்தல் மூலம் தான் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்கிறது.
🌟 நாய் தன் மோப்பத்தின் மூலம் வெடிமருந்துப் பொருள்களைக் கண்டறியும் ஆற்றல் கொண்டது.
🌟 கொசுக்கள் நமது உடலின் வாசனை, வெப்பம் ஆகியவற்றால் நாம் இருக்கும் இடத்தை முகர்தல் உணர்வில் மூலம் கண்டறிகின்றன.
🌟 பாம்பு நாக்கின் மூலமாக நுகர்கிறது. பாம்பிற்குக் காதுகள் இல்லை.
சுவைணர்வு
🌟 வண்ணத்துப் பு%2Bச்சிகள் தம்முடைய கால்கள் மூலம் சுவையை அறிகின்றன.
🌟 தேனீக்கள் தங்களுடைய தாடைகள், முன்னங்கால்கள் மற்றும் உணர் கொம்புகள் மூலம் சுவையை உணர்கின்றன.
🌟 மண்புழு தன் முழு உடல் மூலம் சுவையை உணரும்.
தொட்டால் உணரும்
🌟 நாம் தோலின் மூலமாகத் தொடு உணர்வை அறிகிறோம். ஆனால், பு%2Bனை முகத்திலுள்ள மீசையின் மூலமாகவும் அறிகிறது.
இளம் உயிரிகளின் பாதுகாப்பு
🌟 புதிதாய்ப் பிறந்த யானைக் குட்டியினால் சில காலம் எதையும் பார்க்க இயலாது. யானைக் குடும்பம் அந்தக் குட்டியைத் தொடு உணர்வுகள் மூலமாக வழிநடத்திச் செல்கின்றது.
🌟 தமது சிறப்புப் புலன்உணர்வு வாயிலாக விலங்குகள் தம்மைத் தற்காத்துக் கொள்வதோடு தமது இளம் உயிரிகளையும் பாதுகாத்துப் பேணுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக