ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 ,
உளவியல் வினா விடைகள்
1. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
2. குழந்தைளின் சமூக மனவெழுச்சி பாதிக்க மிக முக்கிய காரணம் - பெண்கள் வேலைக்கு செல்வதால், தனிக் குடும்ப வாழ்க்கையால், நவீன மயமாதல்
3. குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
4. குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் -------------- வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள்
5. குழந்தையின் சமூக மனவெழுச்சியை பாதிக்கும் காரணி -------- - மரபணு, சு%2Bழ்நிலை, கலாச்சாரம்
6. குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
7. குழந்தைகளை நல்ல சு%2Bழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
8. குழந்தைகளுக்கு முதன் முதலில் யாரிடமிருந்து பாசம் தோன்றுகின்றது? - தாய்
9. குழந்தைகளுக்கான 'கற்கும் உரிமை" யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959
10. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக