ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - உணவு
நமது வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகள் உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகும். இதில் மிகவும் தேவையானது உணவு. எல்லா உயிரினங்களுக்கும் உணவு இன்றியமையாதது.
உணவின் தேவை
🌱 உணவு, நமக்கு வேலை செய்யத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
🌱 உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
🌱 நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தருகிறது.
🌱உணவுப் பொருள்களை இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளலாம். அவை, சமைக்கப்படாத உணவுப் பொருள்கள், சமைத்த உணவுப் பொருள்கள்.
சமைக்கப்படாத உணவுப் பொருள்கள்
🌱 பழங்கள், காய்கள், கிழங்குகள் முதலியவற்றைப் பச்சையாக உண்பதால் சத்துகள் வீணாகாமல் முழுமையாக உடலுக்குக் கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
சமைத்த உணவுப் பொருள்கள்
🌱 அரிசி, உருளைக்கிழங்கு, இறைச்சி போன்ற உணவுகளைச் சமைத்துத்தான் உண்ண வேண்டும். அவ்வாறு சமைப்பதால்....
🌱 உண்ணும் உணவு எளிதில் செரிக்கிறது.
🌱 சுவையும், மணமும் கூடுகிறது. கிருமிகள் கொல்லப்படுகின்றன.
🌱 உணவுப் பொருள்கள் மென்மையாகின்றன.
விரைவாக உணவைச் சமைக்க நவீன வகைச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
🌱 மின் அடுப்பு, மின் கொள்கலன், மைக்ரோ ஓவன் முதலியவை அவற்றுள் சில ஆகும்.
ஆரோக்கிய உணவு
🌱 உடல் நலத்திற்குச் சத்துள்ள தூய்மையான உணவு தேவை. எனவே உணவைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும்.
🌱 காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றை நன்கு கழுவிய பின்பே பயன்படுத்த வேண்டும்.
🌱 உணவுப் பொருள்களை மூடிவைப்பதால் தூசு மற்றும் பு%2Bச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.
🌱 சமைத்த உணவினை மிதமான சு%2Bட்டில் உண்ணுதல் நலம்.
உடல் நலத்திற்கு தேவையானவை
🌱 தூய்மையான காற்று, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான உணவு ஆகியவை நல் வாழ்விற்குத் தேவை. இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் நோய்கள் ஏற்படும்.
நோயுற்ற பொழுது உண்ண வேண்டிய உணவுகள்
🌱 எளிதில் செரிக்கும் உணவை உண்ணவேண்டும்.
🌱 தானியக்கஞ்சி, பழச்சாறு, இளநீர் முதலான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் நலம்.
🌱 கொழுப்பு சத்து குறைவாக உள்ள உணவை உண்ணவேண்டும்.
🌱 காரமான உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
🌱 எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக