வெள்ளி, 17 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சுழ்நிலையியல் - மனித உடல்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சுழ்நிலையியல் - மனித உடல்

🍀 நமது உடல் ஒரு வியத்தகு இயந்திரம். நமது உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. கண், காது, மூக்கு, கைகள், கால்கள் முதலியன உடலின் வெளிப்பகுதியில் காணப்படும் உறுப்புகள் ஆகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு செயலுக்குப் பயன்படுகிறது.

🍀 மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, கல்லீரல் முதலியன உடலின் உள்பகுதியில் காணப்படும் உறுப்புகளாகும். அவை பல்வேறு பணிகளைச் செய்கின்றன.

மூளை

🍀 நாம் சிந்திக்கவும் கற்பனை செய்யவும் தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் மூளை பயன்படுகிறது. மூளை முதன்மையான உறுப்பாகும். இது தலையில் உள்ள கபாலத்தில் பாதுகாப்பாக உள்ளது.

🍀மனித மூளை சுமார் 1.36 கிலோ கிராம் எடையுள்ளது. நாம் நிற்பது, நடப்பது, ஓடுவது, பாடுவது, எழுதுவது, பேசுவது எல்லாம் மூளையின் கட்டுப்பாட்டினால்தான்.

இதயம்

🍀 நம் இதயமானது தசைகளினால் ஆன உறுப்பு ஆகும். இது நமது மார்புக் கூட்டினுள் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. மேலுள்ள இரண்டு அறைகள் ஆரிக்கிள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

🍀இதயம் சுருக்கி விரிவதால் இதயத் துடிப்பு ஏற்படுகின்றது. மனிதனின் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது.

🍀இதயம், உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்புகிறது.

நுரையீரல்

🍀 நமது மார்புக்கூட்டுக்குள் மென்மையான பஞ்சுப்பொதி போன்ற இரண்டு நுரையீரல்கள் உள்ளன. நுரையீரல்கள் ஆயிரக்கணக்கான காற்று நுண்ணறைகளைக் கொண்டுள்ளன. இந்தக் காற்று நுண்ணறைகளில்தான் சுவாசித்தலின்போது 'வாயுப் பரிமாற்றம்" நடைபெறுகிறது. வாயுப் பரிமாற்றம் என்பது ஆக்ஸிஜன் வாயுவை உள் இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுவது ஆகும்.

🍀 நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள ஒரு மனிதன் நிமிடத்திற்கு 12 முதல் 15 முறை சுவாசிக்கிறான். நம் தசைகள் வேலை செய்ய ஆக்ஸிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. சுவாசித்தல் இரவும் பகலும் இடைவிடாமல் நடைபெறுகிறது.

சிறுநீரகம்

🍀 நமது உடலில் அவரை விதை வடிவத்தில், இளஞ்சிவப்பு நிறமுடைய இரு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரகம் இரத்தத்தில் கலந்துள்ள கழிவுப்பொருள்களைச் சிறுநீராக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது.

🍀ஒரு நாளைக்கு மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு 1.5 முதல் 2 லிட்டர் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக