ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. 'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என பெண்ணின் பெருமையைக் கூறியவர்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
2. 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" எனக் கூறியவர்? - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
3. 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" எனக் கூறியவர்? - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
4. 'ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால் அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற" - என்ற பாடலை பாடியவர் யார்? - கவிஞர் முடியரசன்
5. எந்நாட்டுக் கவிஞர் சாயலில் பாரதியார் வசனகவிதை எழுதினார்? - அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்
6. யார் தொடக்கத்தில் எந்த இதழில் புதுக் கவிதை எழுதினார்? - ந.பிச்சைமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராச கோபாலன், க.நா. சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் 'மணிக்கொடி" என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினார்.
7. 'எழுத்து"என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யார்? - எஸ். வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா
8. யார் புதுக்கவிதையைப் பரவலாக்கப் பாடுபட்டனர்? - கோவை வானம்பாடிக் குழுவினர்
9. யார் யாரைக் கொண்டது வானம்பாடி இயக்கம்? - புவியரசு, கங்கை கொண்டான், சிற்பி, தமிழ் நாடன், அக்கினிப் புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ. ராஜாராம்.
10. காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்? - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக