தேர்வு தேதி மாற்றம்..!
ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த B.Ed., தேர்வு, ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
👉 தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடத்தப்படுகிறது.
👉 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிப்பு (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது.
👉 TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ஆன்லைன் வழியாக பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
👉 இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.
👉 விண்ணப்பத்திற்கான காலம் முடிவடைந்த பின்னர், ஆசிரியர் தகுதித் ஆன்லைதேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது. ஜூன் 8-ந்தேதி B.Ed., இறுதி ஆண்டு தேர்வின் ஒரு தாளுக்கான தேர்வும் நடைபெற இருக்கிறது.
👉 நடப்பாண்டில் B.Ed., இரண்டாவது ஆண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, B.Ed., மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் B.Ed., தேர்வு நடக்கும் நாளன்றே ஆசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
👉 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
👉 எனவே, ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய சு%2Bழ்நிலை ஏற்படுவதால்...
👉 ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த B.Ed., தேர்வு, ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக