Tet Exam சுழ்நிலையியல்
எறும்புகளின் வாழ்க்கை:
🐜 எறும்புகள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றுமையாகவும் வாழும். எறும்புகள் குடும்பத்தில் இராணி எறும்பு, வேலைக்கார எறும்பு மற்றும் ஆண் எறும்பு ஆகியவை உள்ளன.
🐜 இராணி எறும்பு உருவத்தில் பெரியது. முட்டைகள் இடும். இறகுகள் இருப்பதால் இராணி எறும்பு பறக்கும் திறனுடையது.
🐜 வேலைக்கார எறும்பு உணவு சேமிப்பது, மற்ற எறும்புகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது, இருப்பிடத்தை அகலப்படுத்துவது முதலிய வேலைகளைச் செய்கிறது.
🐜 ஆண் எறும்பிற்கு இறகுகள் மிகச் சிறியதாக இருக்கும். சிறிது காலம் தான் உயிர் வாழும்.

எறும்பின் வாழ்க்கைச் சுழற்சி:
🐜 எறும்பின் வாழ்க்கைச் சுழற்சியானது நான்கு நிலைகளைக் கொண்டது. அவை முட்டை, லார்வா, கூட்டுப்புழு, முழு வளர்ச்சி அடைந்த எறும்பு.
தெரிந்துகொள்வோம்
🐜 கரப்பான் பு%2Bச்சிகள் நடப்பதற்கு மூன்று கால்களை ஒரே சமயத்தில் நகர்த்துகின்றன. மற்ற மூன்று கால்கள் தரையில் ஊன்றியுள்ளன.
🐜 ஒரு புறத்தில் உள்ள முன் மற்றும் பின்னங்கால்களையும் மறுபுறத்தில் உள்ள நடுக்காலையும் நகர்த்துகின்றன.
🐜 எறும்பு தன்னுடைய எடையைப்போல் 20 மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்கது.
🐜 எறும்பு உணர்கொம்புகள் மூலம் வாசனையை உணர்கிறது.
🐜 எறும்பு 2 மி.மீ முதல் 7 மி.மீ நீளம் வரை இருக்கும்.
🐜 சில வகை எறும்புகள் ஒரு நாளில் ஏழு மணிநேரம் தூங்கும்.
🐜 வேலைக்கார எறும்புகள் உணவு இருக்கும் இடம் தெரிந்தவுடன் ஒருவகை வாசனையை உண்டு பண்ணுகின்றன. இதனால், உணவு இருக்கும் இடத்தை மற்ற எறும்புகள் எளிதாகக் கண்டு கொள்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக