செவ்வாய், 14 மே, 2019

வனக்காவலர் தேர்வு..!


வனக்காவலர் தேர்வு..!

👉 தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர்கள் தேர்வுக்குழுமம் (TNFUSRC) வனவர் (Forester), வன காப்பாளர் (Forest Guard), வனக்காவலர் (Forest Watcher) போன்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப, அவ்வப்போது அறிக்கை வெளியிடப்படுகிறது.

👉 தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர்கள் தேர்வுக்குழுமம், தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காவலர் பதவிக்கான 564 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான, இணையவழி தேர்வு குறித்து மார்ச் 2019-ல் அறிக்கை வெளியிடப்பட்டது.

👉 வனக்காவலர் இணையவழி தேர்வு குறித்தான உத்தேசமான கால அட்டவணையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள், மே 2019 முதல் வாரம் என அறிவிக்கப்பட்டது.

👉 நிர்வாகக் காரணங்களினால் மேற்காண் அறிவிக்கையில் உத்தேசமாக குறிப்பிடப்பட்ட தேர்வு கால அட்டவணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

👉 திருத்திய தேர்வு கால அட்டவணை இணையதளம் வாயிலாக, விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 விண்ணப்பதாரர்கள் தேர்வு ஒத்திவைத்தல் அறிக்கை குறித்து அச்சமடையவேண்டாம் என, தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக