செவ்வாய், 14 மே, 2019

TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II


TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II

1. கீழ்க்கண்டவற்றுள் எது ஒன்று நிலத்தின் இயல்புகளில் ஒன்றல்ல என குறிப்பிடுக.

அ. நிலம் இயற்கையின் கொடை ஆகும்

ஆ. நிலத்தின் அளிப்பு நிலையானது அல்ல

இ. நிலத்தின் செழிப்புத் தன்மை மாறுபடும்


விடை: ஆ. நிலத்தின் அளிப்பு நிலையானது அல்ல

2. சிந்து சமவெளி நாகரீகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது? - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

3. பட்டியல்-I I பட்டியல்-II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

பட்டியல்-I    -    பட்டியல்-II

அ. வட கோள குளிர் காலம் - 1. ஜூன் 21

ஆ. வட கோள கோடை காலம் - 2. செப்டம்பர் 23

இ. வட கோள வசந்த காலம் - 3. டிசம்பர் 22

ஈ. வட கோள இலையுதிர் காலம் - 4. மார்ச் 21

அ. 3 2 4 1

ஆ. 4 3 2 1

இ. 3 1 4 2

ஈ. 2 3 1 4

விடை: இ. 3 1 4 2

4. கோடையில் வெப்பம் கடுமையாகவும், குளிர் காலத்தில் குளிர் கடுமையாகவும் நிலவும் காலநிலை - கண்டக் காலநிலை

5. 2017ம் ஆண்டிற்கான இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

அ. எஸ்.ஒய். குரேஷி

ஆ. எச்.எல். தத்து

இ. ஜே.எஸ். கேகார்


விடை: இ. ஜே.எஸ். கேகார்

6. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள மாவட்டம் எது? - கடலு}ர்

7. மூன்றாவது புத்தசமய மாநாடு எங்கு கூட்டப்பட்டது? - பாடலிபுத்திரம்

8. உலகின் முதன் முதலில் ஏவப்பட்ட வானிலைச் செயற்கைக்கோள் ----------. - டிராஸ்-I

9. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் -----------. - சர். எலிஜா இம்பே

10. சிந்து சமவெளி நாகரீக துறைமுக நகரம் லோத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் --------. - குஜராத்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக