TET - 2019, பொது அறிவு வினா விடைகள் !!
1. இரத்த ஓட்ட மண்டலம் என்பது --------------- உள்ளடக்கியது? - இதயம், இரத்தம், இரத்த குழாய்கள்
2. இரத்த ஓட்டத்தின் மூலம் --------------- மற்றும் --------------- உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. - ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துகளையும்
3. மனித இதயம், உள்ளீடற்ற நான்கு அறைகளோடு கூடிய --------------- ஆல் ஆன உறுப்பு. - கார்டியாக் தசையால்
4. மனித இதயம் --------------- வடிவம் உடையது. - கூம்பு
5. இதயத்தைச் சுற்றி இரட்டைச் சுவரினால் ஆன உறைக்கு --------------- என்று பெயர். - பெரிகார்டியம்

6. இதயத்தின் வலப்பகுதி --------------- மூலம் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தைப் பெற்று ஆக்சிஜனேற்றமடைய நுரையீரலுக்குள் செலுத்துகிறது. - பெருஞ்சிரைகள்
7. இதயத்தின் இடதுப்பகுதி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல்களிடமிருந்து பெற்று --------------- மூலமாக உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் செலுத்துகிறது. - தமனிகள்
8. வலது ஏட்ரியத்திற்கும், வலது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் காணப்படுவது எது? - மூவிதழ் வால்வு
9. இடது ஏட்ரியத்திற்கும், இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் காணப்படும் வால்வு எது? - ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு
10. நுரையீரல் தமனி, மகாதமனி புறப்படும் இடத்தில் காணப்படும் வால்வு எது? - அரைச்சந்திர வால்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக