TET 2019 சுழ்நிலையியல்
தரங்கம்பாடிக் கோட்டை
🌟 டென்மார்க் நாட்டைச் சார்ந்தவர்கள் மதத்தைப் பரப்பவும், வியாபாரத்துக்காகவும் தமிழகம் வந்தனர். இந்நாட்டைச் சார்ந்த டேனியக் கிழக்கிந்திய வாணிகக் கம்பெனியினர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தரங்கம்பாடியில் தங்கி வியாபாரம் செய்தனர். இதற்காக இக்கோட்டை கி.பி.1620 இல் ஐரோப்பியக் கோட்டைகளின் வடிவமைப்பில் கட்டப்பட்டது.
🌟 நடுவில் ஒரு முற்றமும், அதனைச் சுற்றிப் பல கட்டடங்களும் உள்ளன. அவற்றை அடுத்து வெளிப்புறத்தில் செங்கற்களால் உறுதியாகக் கட்டப்பட்ட மதில்கள் உள்ளன. மதில்கள் நான்கு மூலைகளிலும் காவல் அரண்கள் உள்ளன.
🌟 அவற்றை அடுத்து அகழிகள் உள்ளன. இக்கோட்டை பல்வேறு காலக்கட்டங்களில், டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், டென்மார்க் ஆளுநர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் கட்டுப்பாட்டில் இருந்தது.
🌟 தரங்கம்பாடியில் சிறு சிறு தொழிற்சாலைகள் இருந்தன. இக்கோட்டைக்குள் டென்மார்க் நாட்டின் ஆளுநர் மாளிகை, வெடிமருந்துக் கிடங்கு, சுங்க அலுவலகம், சிறைச்சாலை மற்றும் கிறித்துவத்தேவாலயம் ஆகியவை இருந்தன.
சீகன்பால்க்
🌟 கி.பி.1706 ஆம் ஆண்டு ′சீகன் பால்க்′ என்ற பாதிரியார் இங்கு வந்தார். அவர் கிறித்துவத் தேவாலயங்களை அமைத்தார்.
🌟 கூட்டன்பர்க் கண்டறிந்த அச்சு இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தார். முதன் முதலாகத் தரங்கம்பாடிக் கோட்டையில், ஒலைச்சுவடிகளில் இருந்த தமிழ்ப்படைப்புகளை அச்சடித்துப் புத்தகமாகக் கொடுத்தார். தமிழில் பலரது படைப்புகளைப் புத்தக வடிவில் அச்சடிப்பதற்குக் காரணமாய் அமைந்தவரும் இவரே.
தெரிந்துக் கொள்வோம்
🌟 தஞ்சை மன்னர் நாகப்பட்டினத்திற்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் 8 கி.மீ நீளம், 5 கி.மீ அகலம் உள்ள ஒரு நிலப்பரப்பை டேனியர்களுக்குக் குத்தகைக்கு விட்டார்.
🌟 இதற்காக ஆண்டுக்கு ரூ.4000 வீதம் குத்தகை வசு%2Bலிக்கப்பட்டது. டென்மார்க் அரசுக்கும் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் தங்கத்தகட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
🌟 டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் தரங்கம்பாடிக் கோட்டையை 1845 இல் ஆங்கிலேயர்க்கு விற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக