TET 2019 -சுழ்நிலையியல்
உறுமி மேளம்
🌟 மேளங்களில் பல வகை உண்டு. அவற்றுள் உறுமி மேளம் என்பது வித்தியாசமான தோல் இசைக் கருவி. உறுமி மேளத்தினைத் தோளில் மாட்டிக்கொண்டு வளைந்த குச்சியால் தேய்த்து வாசிப்பர். இது கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமியக்கலை நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுகிறது.
நாதசுரம்
🌟 நாதசுரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். தென்னிந்தியாவில் இது மங்கல இசைக்கருவியாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசைக்கப்படுகிறது. பெரிய கோயில்களில் அன்றாடம் பல முறைகள் இசைக்கப்படுவது வழக்கம்.
🌟 இது நீண்ட உள்ளீடற்ற உருவமுடையது. ஒரு முனை குறுகியும், முறுமுனை அகன்றும் காணப்படும் இக்கருவி ஆச்சா மரத்தினால் செய்யப்படுகிறது.
🌟 புனல் வடிவத்தில் அனசு என்ற பகுதியும், நீள வடிவத்தில் உளவு என்ற பகுதியும் உருவாக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. குறுகிய முனையில் ஊதல் வடிவில் பு%2Bவரசம் இலையைப் பதப்படுத்திச் செய்யப்பட்ட சீவாளி எனப்படும் ஒரு வடிவமைப்புப் பொருத்தப்பட்டு இசைக்கப்படும். சீவாளியின் வழியே நம் வாயின் மூலம் காற்றைச் செலுத்தித் துளைகளில் விரல்களை வைத்து மூடியும், திறந்தும் இசைக்கப்படுகிறது.

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தவில்
🌟 இது ஒரு தோல் இசைக்கருவி. தவில் என்பது நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும், கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
🌟 இது பலாமரக் கட்டையால் செய்யப்படுகிறது. தவில் என்பது உள்ளீடற்ற உருளை வடிவத்தில் இருக்கும். உருளையின் இருபுறமுள்ள வட்டப்பகுதி ஆடு அல்லது மாட்டுத்தோலினால் மூடப்பட்டிருக்கும். ஒரு கையில் பிரம்பாலான அடி குச்சியும், மற்றொரு கைவிரல்களில் குப்பிகளும் மாட்டிக்கொண்டு தவிலை இசைப்பர்.
🌟 ஆரம்பத்தில் மூங்கில் பட்டைகளைப் பதப்படுத்தி இருபக்கமும் இழுத்துக் கட்டித் தவில் தயார் செய்தனர். இக்காலத்தில் மெல்லிய இரும்புப் பட்டையை இழுத்துக் கட்டி இருபுறமும் இணைக்கின்றனர்.
🌟 தவிலை உருவாக்குவதும், பராமரிப்பதும் கடினம். எனவேதான் தவில் வாசிக்கப்படாத பொழுது அக்கருவியைப் பராமரிக்க வேண்டி இழுத்துக் கட்டப்பட்ட இரு முனைகளையும் தளர்த்தி வைப்பர்.
🌟 நாதசுரமும், தவிலும் அனைத்து நல்லநிகழ்ச்சிகளுக்கும் இசைக்கப்படுவதால் மங்கல இசைக் கருவிகள் என அழைக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக