TET 2019,சுழ்நிலையியல்
வயலின்
🌟 வயலின் என்ற நரம்பிசைக் கருவி முற்காலத்தில் பிடில் என்று அழைக்கப்பட்டது. அரங்க இசைக்கு முக்கிய துணைக்கருவியாக வயலின் உள்ளது. தென்னிந்திய இசையில் வயலின் முக்கியமான கருவியாகும்.
வீணை:
🌟 வீணை ஒரு தந்திக்கருவி (கம்பிக்கருவி). வீணையில் விசித்திரவீணை, சரஸ்வதி வீணை, ருத்ரவீணை எனப் பலவகையுண்டு.
🌟 கர்நாடக இசைக்கருவிகளில் வீணை மிகவும் தொன்மையானதும் அழகானதும் ஆகும். இழுத்துக் கட்டப்பட்டத் தந்தியை மீட்டுவதன்மூலம் இசை உருவாகிறது. அமர்ந்த நிலையில் இரு கைகளாலும் வீணை இசைக்கப்படுகிறது. யாழ் இசைக்கருவியின் நவீன வடிவமாக வீணை அமைந்துள்ளது.

மிருதங்கம்:
🌟 தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் தொன்மையான தாள வாத்தியமாகும். மிருதங்கம் தோல் இசைக்கருவிகளில் ஒன்று. இது பலாமரக்கட்டையினால் உள்ளீடற்ற உருளை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். உருளையின் இருபுறமும் மாட்டுத் தோலினால் மூடப்பட்டிருக்கும்.
🌟 ஒரு புறம் உள்ள வட்டப்பகுதியின் மையத்தில் வெள்ளை ரவையை நீரில் குழைத்துத் தடவி வாசிப்பர். மறுபுறம் உள்ள வட்ட வடிவத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு கலவை பு%2Bசப்பட்டிருக்கும். அதற்குச் சோறு அல்லது கரணை என்று பெயர்.
🌟 மிருதங்கம், கர்நாடக இசைக் கச்சேரி, பஜனை இசை, தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பெறுகிறது. மத்தளம், தபேலா போன்றவை மிருதங்கத்தோடு தொடர்புடைய தோல் இசைக் கருவிகளாகும்.
ஜலதரங்கம்:
🌟 இது ஒரு பாரம்பரிய இசைக்கருவி ஆகும். இது நீரைப் பயன்படுத்தி இசைக்கும் ஒரு கருவி ஆகும். நீரில் அதிர்வுகளை ஏற்படுத்தி அதன்மூலம் இசை உருவாக்கப்படுகிறது.
🌟 பல்லேறு வடிவமைப்பில் உள்ள பாத்திரங்களில் நீர் நிரப்பி மூங்கில் குச்சிகளால் பாத்திரங்களைத் தட்டி அதிர்வுகளை உண்டாக்கி இசை உருவாக்கப்படுகிறது.
தெரிந்துகொள்வோம்:
🌟 சர்வதேச இசை தினம்: 1982 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற இசை விழாவில், ஆண்டு தோறும் ஜூன் 21 ஆம் நாளை இசை தினமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
🌟 இந்தியாவின் இரு இசை வடிவங்கள் - கர்நாடகம், இந்துஸ்தானி.
🌟 கர்நாடக இசை என்பது பழமையான இசையைக் குறிக்கும்.
🌟 கர்நாடகம் என்ற சொல்லுக்கு காதுக்கு இனிமையானது என்று பொருள்.
🌟 இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும் ராகம் - சங்கராபரணம்
🌟 இசைக்கு அடிப்படை ஏழு சுரங்கள் என இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சுரங்கள் (சரிகமபதநி) எண்ணிலடங்காப் பண்கள் உருவாக அடிப்படையாக அமைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக