செவ்வாய், 7 மே, 2019

TET Exam 2019 -பொது அறிவு - புவியியல் - வானிலை மற்றும் காலநிலை


TET Exam 2019 -பொது அறிவு - புவியியல் - வானிலை மற்றும் காலநிலை.

♦ வளிமண்டலத்திலுள்ள நீராவியானது நீர் சுருங்குதல் மூலம் நுண்ணிய நீர் திவலைகளாகவோ அல்லது பனிப் படிகங்களாகவோ மாற்றப்படுவதின் தொகுப்பே மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

♦ வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் நுட்பமான நீர்த்துளிகளே மேகங்களை உருவாக்குகின்றன. மேகங்களின் வடிவம் மற்றும் காணப்படும் உயரத்தின் அடிப்படையில் கீற்று மேகங்கள், படை மேகங்கள், திரள் மேகங்கள் மற்றும் கார்படை மேகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

1. மான்சு%2Bன் என்ற சொல்லானது ------------- என்ற அரேபியச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? - மவுசிம் (ஆயரளiஅ)

2. மான்சு%2Bன் என்ற சொல்லின் பொருள் - பருவங்கள்

3. மழை மேகங்கள் என்றழைக்கப்படுவது எது? - கார்படை மேகங்கள்

4. மழை அளவை அளவிடப் பயன்படும் கருவி எது? - மழைமானி

5. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் எப்போது உருவாகின்றன. - அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. மின்னல் என்பது என்ன? - மின்னல் என்பது வளிமண்டலத்தில் வெளிப்படும் மின் சக்தியாகும்.

7. மின்னல் ஒரு நொடிக்கு எத்தனை மைல் வேகத்தில் பயணிக்கின்றது. - 96,560

8. மின்னல் எப்போது உருவாகிறது? - நேர் மற்றும் எதிர் மின்னு}ட்டப் பண்புகளைக் கொண்ட மேகங்கள் ஒன்றுக்கொன்று சந்திக்கும் போது மின்னல் உருவாகிறது.

9. இடியுடன் கூடிய புயல் ------------- மேகங்களால் உருவாக்கப்படுகிறது? - கார்திரள்

10. பு%2Bமத்தியரேகை தாழ்வழுத்த மண்டலத்தினை ------------- என்று அழைப்பர். - அமைதி மண்டலம் அல்லது டோல்டுராம்ஸ்

11. கேரளா மற்றும் தமிழ்நாடு ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும், கேரளா அதிக மழைப்பொழிவை பெறுகிறது ஏன்? - கேரளா மேற்கு தொடர்ச்சிமலையின் காற்று முகப் பகுதியிலும், தமிழ்நாடு எதிர் முக காற்று திசையிலும் அமைந்திருப்பதே, இதன் முக்கிய காரணமாகும்.

12. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகளுக்கு ------------- என்று பெயர். - கோள் காற்றுகள்

13. ------------- மேகங்கள் மழை பொழிவு இடி மற்றும் மின்னலோடு தொடர்புடையவை. - திரள் மேகங்கள்

14. -------------ல் சு%2Bரியக்கதிர்கள் மின்செறிவு%2Bட்டப்படுகின்றன. - அயனியடுக்கு

15. துணை அயன உயர்வழுத்த மண்டலம் ------------- என்று அழைக்கப்படுகிறது. - குதிரை அட்சரேகைகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக