TET தேர்வு - Ratio and Proportions தொடர்பான முக்கிய வினாக்கள்...! சுழ்நிலையியல்
விலங்குகளும் ஐம்புலன்களும்
🌟 விலங்குகளும் நம்மைப் போலவே பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுவுணர்வு, சுவை உணர்வு ஆகிய புலன் உணர்களைப் பெற்றிருக்கின்றன.
🌟 அனைத்து விலங்குகளும் புலன் உறுப்புகள் மூலம் தமது சுற்றுப்புறம், வாழிடம் முதலியவற்றை அறிந்து கொள்கின்றன. குறிப்பிட்ட சில விலங்குகள் உணவைக் கண்டறிவதற்காகவும் தற்காப்பிற்காகவும் சில புலன் உணர்வுகளில் அதிகத் திறன் பெற்றுள்ளன.
விலங்குகளின் பார்வை
🌟 நாம் ஒரு பொருளைப் பார்ப்பதற்கும் அதே பொருளை விலங்குகள் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. காணும் பொருளின் வண்ணம் தொலைவு மற்றும் தௌpவு ஆகியவற்றில் விலங்குகளின் பார்வை மாறுபடுகிறது.
🌟 கழுகு, பருந்து முதலிய பறவைகள் மனிதன் பார்க்கும் தொலைவைவிட நான்கு மடங்கு தொலைவிலுள்ள பொருள்களைப் பார்க்கும் திறன் உடையவை.
🌟 பச்சோந்தியால் ஒரே நேரத்தில் இடக் கண் மூலம் ஒரு பொருளையும் வலக் கண் மூலம் மற்றொரு பொருளையும் பார்க்க இயலும்.
🌟 முயல் எல்லாத் திசைகளில் உள்ள பொருள்களையும் தலையைத் திருப்பாமல் பார்க்கும் திறன் கொண்டது.

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தெரிந்துகொள்வோம்
🌟 இரவு நேரத்தில் புலியின் பார்வைத்திறன் மனிதனைவிட ஆறு மடங்கு அதிகம்.
🌟 புலியின் உறுமல் ஒலியானது மூன்று கிலோ மீட்டர் வரை கேட்கும்.
🌟 புலியின் காதுகள் எல்லாத் திசைகளிலும் திரும்பும் திறனுடையது; இலைகளின் அசைவையும் விலங்குகள் புல்லில் நடந்து வரும் ஒலியையும் கேட்டறியும் திறனையும் அதனைப் பிரித்தறியும் திறனையும் கொண்டது.
🌟 தன்னுடைய மீசையினால் காற்றில் ஏற்படும் அதிர்வை உணரும். இதன் உதவியால் இரவில் இயங்கவும் இரையைக் கண்டறிவும் புலியால் இயலும்.
🌟 நாம் பல வண்ணங்களைப் பார்ப்பது போல் விலங்குகளால் பல வண்னங்களைப் பார்க்க முடியாது.
🌟 எருதுகளுக்கு எல்லாப் பொருள்களுமே கறுப்பு வெள்ளையாகத்தான் தெரியும். முதலைக்கும் இப்படித்தான் தெரியும்.
🌟 தேனீக்களால் சிவப்பு வண்ணத்தைப் பார்க்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக