புதன், 15 மே, 2019

TET தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!


TET தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

👉 தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடத்தப்படுகிறது.

👉 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிப்பு (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது.

👉 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு 15.03.2019 முதல் 12.04.2019 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு....

👉 தாள் I - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும்,

👉 தாள் II - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 1 மணி வரையிலும்,

👉 எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம், அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக