TET தேர்விற்கு எப்படி படிப்பது !!
தேர்வுக்கு எப்படி படிப்பது :
🌀 TET தேர்வுக்காக படிக்கும் பாடம் முழுவதையும் கவனமாக படிக்க வேண்டும். படிக்கும் பாடத்தில் உள்ள குறிப்புகள், ஆசிரியர்களின் பெயர்கள், தலைப்புகள் மற்றும் துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு படித்தால் இந்த பாடம் எதைப்பற்றியது என்பது நன்கு புரியும்.
🌀 பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: இயற்பியலில் அலகுகள் என்ற சொல்லை வாசிக்கும்போது அலகுகள் என்றால் என்ன? அலகுகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.
🌀 பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் வினாக்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
🌀 இவ்வாறு செய்வதால் அதைப்பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எதற்காக இதைப் படிக்கிறேன்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
கவனமாக வாசித்தல் :
📖 அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.
📖 படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும்.
📖 புத்தகத்தில் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு மட்டும் அடிக்கோடிட வேண்டும்.
📖 இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும்.
நினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள் :
👉 படிக்கும் போது சிறந்த சு%2Bழ்நிலையில் கற்க வேண்டும்.
👉 படிக்கும் போது தேவையான அளவு ஓய்வு எடுத்து படிக்க வேண்டும்.
👉 படிப்பில் ஆர்வமும், கவனமும் வேண்டும்.
👉 பாடங்களை புரிந்து படிக்கும் திறனைக் கையாள வேண்டும்.
👉 படிக்கும் போது குழுவாக படிப்பது, படித்தவற்றை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்வது போன்றவை பாடப்பகுதியை விரைவாக படிப்பதற்கு உபயோகமாக இருக்கும்.
👉 தேர்வுக்கு முழுவதுமாகத் தயாராகிவிட்டோம் என்று நீங்கள் உணரும் போது முந்தைய ஆண்டு வினாத்தாள் அல்லது மாதிரி வினாக்களுக்கான விடைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதிப் பார்க்க வேண்டும்.
மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல் :
📝 பாடத்தை படிக்கும்போது ஒரு பிரிவை முழுமையாக முடித்தப்பிறகு அடுத்த பிரிவை தொடர வேண்டும்.
📝 இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும்.
📝 TET - அப்ளிகேஷனில் ழேவகைiஉயவழைn மூலம் கேட்கப்படும் வினாக்களை பயிற்சி செய்ய வேண்டும்.
தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை :
📖 தேர்வு நாள் அன்று புது பாடப்பகுதிகளை படிப்பதை தவிக்க வேண்டும். இதனால் தேர்வுக்கான பதற்றம், அச்சம் ஆகியவற்றை அகற்றலாம்.
📖 தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும்.
📖 ஒரு வினாவிற்கான விடை நினைவிற்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். இறுதியாக அந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
📖 இவ்வாறு செய்தால் நீங்கள் தேர்வில் நிச்சயம் வெற்றிபெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக