TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு!
👉 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி TNPSC தேர்வாணையம் அறிவித்த அருங்காட்சியக அலுவலருக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
👉 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் Curator in Museum Department தேர்வை வருகின்ற 19.05.2019 அன்று நடத்துவதாக அறிவித்திருந்தது.
👉 இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலை வருகின்ற 19.05.2019 அன்று அரவக்குறிச்சி, சு%2Bலு}ர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது.
👉 சட்டமன்ற இடைத் தேர்தலை கருத்தில் கொண்டு 19.05.2019 FN/AN அன்று நடைபெறவிருக்கும் Curator in Museum Department எழுத்துத் தேர்வை 25.05.2019 FN/AN அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
👉 இத்தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 தேர்வு மையங்களில் நடைபெறும் என்று, TNPSC தேர்வாணையம் அதிகாரப்பு%2Bர்வமாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக