நீட் தேர்வுக்கு ஆடை, ஆபரண கட்டுப்பாடு...!
👉 மருத்துவக் கல்லு}ரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகியவற்றைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
👉 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் மே 5-ம் தேதி பகல், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் :
👉 தேர்வு மையம் அமைந்துள்ள வளாகத்துக்குள், சரியாக, 1:30 மணிக்குள் வந்து விட்டால் மட்டுமே, தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். ஒரு நொடி தாமதமானாலும், தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👉 தேர்வுக்கு வருவோருக்கு, உடை மற்றும் உடல் சோதனை இருக்கும் என்பதால், அதற்கேற்ப முன்கூட்டியே, தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும்.
👉 விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த, ஒரு பாஸ்போர்ட் புகைப்படத்தை, வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்காக எடுத்து வர வேண்டும்.
👉 மாணவர்கள், தங்களுக்கான அரசு அங்கீகரித்த அடையாள அட்டை, அதாவது, வருமான வரித்துறை அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைபோன்றவற்றில், ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும்..
👉 புத்தகம், துண்டு காகிதம், பேனா, பென்சில், பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், அழிப்பான், லாக் அட்டவணை, எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் போன், இயர்போன், கையில் அணியும் ஹெல்த் பேண்ட் மற்றும் கேமரா உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்து வரக் கூடாது.
👉 பெல்ட், தோள்பை, கைப்பை, தொப்பி, பர்ஸ் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது. எந்த விதமான அணிகலன்களையும் அணிந்து வரக்கூடாது. அவற்றை பாதுகாத்து வைக்க, தேர்வு மையத்திற்குள் எந்த வசதியும் கிடையாது.
👉 தேர்வு அறைக்குள், புகைப்படம், ஹhல் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
உடைகள் என்ன?
👉 சாதாரண ஸ்லிப்பர், குறைந்த உயரம் உள்ள காலணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஷூமற்றும் சாக்ஸ் அணிந்து வரக்கூடாது. அரைக்கையுடன் கூடிய மெல்லிய ஆடைகள் மட்டும் அணிந்து வரலாம். முழுக்கை சட்டை அணிந்து வர அனுமதி இல்லை.
👉 பாரம்பரிய, கலாச்சார மற்றும் குறிப்பிட்ட மதம், இனம் சார்ந்த ஆடை உடுத்திவருவோர், சோதனைகளுக்கு வசதியாக, பகல், 12:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். தேர்வு நேரம் மாலை, 5:00 மணிக்கு முடியும் வரை, தேர்வர்கள் தேர்வறையில் காத்திருக்க வேண்டும்.
ஆபரணங்கள் என்ன?
👉 மாணவியர் சரியான ஆடைகளை தேர்வு செய்வது நல்லது. தலை முடியில், கிளிப், மூக்குத்தி, காது வளையம், உடையில் செயற்கையாக அணிந்த கொக்கி போன்றவை அணிந்து வரக் கூடாது. மேலும் உடைகளில் பெரிய பொத்தான்கள் மற்றும் பேட்ஜிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் சரியான ஆடைகளை அணிந்து செல்வது, நேர விரயம், சிக்கல்களை தவிர்க்க உதவும்.
👉 2018ல் நடந்த தேர்வின் போது, மாணவர்களுக்கு தேர்வறையிலேயே பேனா வழங்கப்பட்டது. இந்த முறையும், தேர்வறைக்கு பேனா எடுத்து வரக் கூடாது என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட்(NEET) தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக